பக்கோடா மொர மொரப்பக இருக்க
பக்கோடா மொர மொரப்பாக இருக்க மாவைக் கலக்கும் போது சிறிதளவு நெய்யும் உப்பிட்ட தயிரும் கலந்து கொண்டால் போதும்.
வாழ்வியல் வழிகாட்டி
பக்கோடா மொர மொரப்பாக இருக்க மாவைக் கலக்கும் போது சிறிதளவு நெய்யும் உப்பிட்ட தயிரும் கலந்து கொண்டால் போதும்.
உருளைக்கிழங்கை சீவியதும் சிறிதளவு பயத்தம் மாவைத் தூவி விட்டு சிப்ஸ் செய்தால் மொரமொரப்பாக இருக்கும்.
அப்பளத்தின் இருபுறமும் லேசாக கொஞ்சம் எண்ணெய் தடவி அப்பளத்தை தணலில் சுடவும். அப்பளம் எண்ணெய்யில் பொரித்தது போலவும், அதிக சுவையோடும் இருக்கும்.
நெய் வைத்திருக்கும் ஜாடியில் ஒரு துண்டு வெல்லத்தை போட்டு வைத்திருந்தால் நெய் மணம் மாறாமல் இருக்கும்.
வெண்ணையைக் காய்ச்சி இறக்குகையில் அரை ஸ்பூன் வெந்தயத்தை போட்டால் நெய் நல்ல மணமாய் இருக்கும்.
நெய் காய்ச்சும் போது கடைசியாக கொஞ்சம் முருங்கை கீரையைப் போட்டால் நல்ல மணமாக இருக்கும். உருகிய நெய்யைப் பாத்திரத்தில் ஊற்றி வைக்கும்...
கடலை எண்ணெய்யில் சிறிது புளி உருண்டைப் போட்டு வைத்தால் எண்ணெய் காறாது.
இட்லி, தோசை மாவுடன் காய்ந்த மிளகாய் இரண்டு போட்டு வைத்தால் மாவு புளிக்காது.
எந்த ஊறுகாய் செய்தாலும் ஒரு துளி வினிகரை சேர்த்துக் கொண்டால் ஊறுகாய்த் துண்டுகளின் வடிவம் மாறாமல் இருக்கும்.
ஆம்லேட் ஊற்றிய வாணலியை உப்பால் தேய்த்து கழுவினால் சுத்தமாகும்.