கை, கால் வீக்கம் குணமாக
நீர் முள்ளி, நெருஞ்சில், வெள்ளரி விதை, கோவை இலை, சுரக்காய், நாயுருவி இலை, சோம்பு, கடுக்காய், மிளகு இவைகளை சம அளவு...
வாழ்வியல் வழிகாட்டி
நீர் முள்ளி, நெருஞ்சில், வெள்ளரி விதை, கோவை இலை, சுரக்காய், நாயுருவி இலை, சோம்பு, கடுக்காய், மிளகு இவைகளை சம அளவு...
வேலிப்பருத்தி சாற்றை சுண்ணாம்பு கலந்து வீக்கங்களில் தடவி வர குணமாகும்.
நெல்லிக்காய், முருங்கைக்காய், முள்ளங்கி இவைகளை உணவில் தாராளமாக சேர்த்து வந்தால் வீக்கம் குறையும்.
தேங்காய் எண்ணெய்யுடன் கண்டங்கத்திரி இலையின் சாறை ஊற்றி இரண்டையும் கலந்து தடவினால் வலி குறையும்.
நெல்லிக்காயை அரைத்து விளக்கெண்ணெயில் காய்ச்சி உள்ளங்கை, உள்ளங்கால்களில் தடவி வர எரிச்சல் தீரும்.
மருதோன்றி இலையுடன் சோற்றுக்கற்றாழையை சேர்த்து அரைத்து பற்று போட உள்ளங்கை எரிச்சல் தீரும்.
சீந்தில் கொடியை உலர்த்தி பொடி செய்து கால் கிராம் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வர விரல்களில் ஏற்படும் குத்தல் தீரும்.
இலந்தை இலைகளை எடுத்து நசுக்கி சாறு எடுத்து உள்ளங்கை, உள்ளங்கால்களில் தடவி வர வியர்ப்பது நின்று விடும்.