கயல்
பாகற்காயில் கசப்பு நீங்க
நறுக்கிய பாகற்காயுடன் உப்பைச் சேர்த்துப் பிசறி 10 நிமிடங்கள் கழித்து எடுத்துத் தண்ணீரில் ஒருமுறை கழுவிப் பிறகு கறி செய்தால் கசப்பு...
பாகற்காய் கசப்பு தெரியாமல் இருக்க
பாகற்க்காயைக் குழம்பு வைக்கும் போது அதில் ஒரு கேரட்டையும் சேர்த்துப் போட்டு வைத்தால் பாகற்காய் குழம்பில் கசப்பே தெரியாது.
எலுமிச்சையில் எளிதாக சாறு பிழிய
எலுமிச்சை பழத்தை இரண்டு நிமிடம் வெந்நீரில் போட்டு வைத்து எடுத்துப் பிறகு சாறு பிழிந்தால் நிறைய சாறு வரும். பிழிவதும் சுலபம்.
காய்கறி சுலபமாக வேக
அவரைக்காய், கொத்தவரங்காய், கத்தரிக்காய், வற்றல்களைக் குழம்பில் போடுவதற்கு முன் வெந்நீரில் 15 நிமிடம் ஊற வைத்து போட்டால் சுலபமாக வெந்து விடும்.
காலிப்ளவர்யில் உள்ள பூச்சி வெளியேற
காலிபிளவரை சமைப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு அதன் இலைகளை நீக்கி விட்டு ஒரு பிடி உப்பு கலந்த தண்ணீரில் குடை...
கிழங்குகளை வேகவைக்கும் முறை
கிழங்குகளை உப்புப் போட்டு வேக விடக்கூடாது. அப்படி செய்தால் கிழங்கு வேகாது. கிழங்குகளில் சேனையை மட்டும் தோலோடு வேக விடக்கூடாது.
எண்ணெய் கெடாமல் இருக்க
எண்ணெய்களுடன் சிறிது மிளகைப் போட்டு வைத்தால் நீண்ட நாட்கள் வரை எண்ணெய் கெடாது.
தோசையை எளிதாக எடுக்க
தோசை வர்க்கும் போது கல்லோடு தோசை பிடித்துக்கொண்டால் சிறிது எண்ணெயுடன் உப்பையும் போட்டுத் தேய்த்து எடுத்த பிறகு தோசை ஊற்றினால் எளிதாக...
தோசை எளிதாக வர
ஒரு வெங்காயத்தை பாதியாக நறுக்கித் தோசைக் கல்லில் தேய்த்தால் தோசை மிகவும் எளிதாக வரும்.