வறட்டு இருமல் குணமாக
வெங்காயமலரையும், வெங்காயத்தையும் சம அளவு எடுத்து பின்பு வதக்கி வெல்லத்துடன் சேர்த்து உண்டு வர வறட்டு இருமல் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
வெங்காயமலரையும், வெங்காயத்தையும் சம அளவு எடுத்து பின்பு வதக்கி வெல்லத்துடன் சேர்த்து உண்டு வர வறட்டு இருமல் குணமாகும்.
மாதுளம்பூ மொக்குகளை வெயிலில் உலர்த்தி இடித்துப் பொடியாக்கி அதை வேளைக்கு 1 சிட்டிகை அளவு அருந்தி வர உடனடியாக இருமல் அகலும்.
கண்டங்கத்திரி வேரை மைய அரைத்து வெள்ளாட்டுப் பாலில் காய்ச்சி புகட்டி வர குழந்தைகளுக்கு உருவாகும் தொடர் இருமல் குணமாகும்.
மாதுளம் பூக்களை 2 மடங்கு நீர் விட்டு சுண்டக்காய்ச்சி கொதி வந்ததும் அதனுடன் எலுமிச்சை பழச்சாறு, தேன் விட்டுக் கலக்கி கொப்பளிக்கவும்....
விஷ்ணுகிரந்தி பொடியை வெந்நீரில் கலந்து அருந்தி வந்தால் இரைப்பிருமல் குணமாகும்.
மாஇலையைத் தேன் விட்டு வதக்கி நீர் கலந்து அருந்தி வர குரல் கமறல், தொண்டைக்கட்டு குணமாகும்.
மாதுளம்பூ சாற்றை காய்ச்சி வடிகட்டி தேன் கலந்து உண்டு வந்தால் தொண்டை நோய் அகலும்.
பொன்னாவாரை விதையை பால் விட்டு மைய அரைத்து இவற்றை அருந்தி வந்தால் கக்குவான் இருமல் குணமாகும்.
100 கிராம் முட்டைக்கோஸை பச்சையாக 5 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உணவுக் குழாயில் சிக்கிய கோழி எலும்பு மலத்துடன் வெளியேறும்.