கயல்
சிரங்கு குறைய
குப்பை மேனி இலையுடன் சிறிய துண்டு மஞ்சள், சிறிதளவு உப்பு சேர்த்து மைபோல் அரைத்து சிரங்கின் மேல் பூச சிரங்கு குறையும்.
பித்தம் குறைய
கைப்பிடியளவு வில்வ இலையை ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிக்கட்டி கொடுத்து வர பித்தம் குறையும்.
பித்தம் தணிய
புங்க மரத்தின் வேரைப் பொடியாக நறுக்கி அதில் ஒன்றரை டம்ளர் தண்ணீர் விட்டு ஒரு டம்ளராக சுண்டக் காய்ச்சி காலை மாலையாக...
பித்த வெடிப்பு குறைய
மாசிக்காய், கடுக்காய், விளக்கெண்ணெய், வேப்பெண்ணெய், தேங்காய் எண்ணெய் சரி சமமாக கலந்து தடவினால் பித்த வெடிப்பு குறையும்.
பித்த வெடிப்பு குறைய
வேப்பஎண்ணெய்யை மஞ்சள் சேர்த்து வெடிப்பு உள்ள இடத்தில் போட்டால் பித்த வெடிப்பு குறையும்.
கட்டி உடைய
பப்பாளி இலையை மைபோல் அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பற்றுப்போட்டு வந்தால் கட்டி பழுத்து உடையும்.
இருமல் குறைய
இஞ்சி மற்றும் சிற்றரத்தை சேர்த்து இடித்து கஷாயமாக குடிப்பதன் மூலமாக இருமல் குறையும்.
உடல் எரிச்சல் குறைய
ஆவாரம் பூவுடன் பாசிப் பயறைச் சேர்த்து அரைத்து எரிச்சல் உள்ள பாகத்தில் தேய்த்துக் குளித்தால், எரிச்சல் குறையும்.
வெட்டுக்காயம் ஆற
புங்க இலையை மைபோல் அரைத்து காயத்தின் மேல் வைத்து கட்டி வந்தால் வெட்டுக்காயம் ஆறிவிடும்.