பித்தம் விலக
வேப்பம் பூவை சிவக்க பொரித்து அதனுடன் உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் பித்தம் விலகும்.
வாழ்வியல் வழிகாட்டி
வேப்பம் பூவை சிவக்க பொரித்து அதனுடன் உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் பித்தம் விலகும்.
சந்தனத்தை பன்னீருடன் கலந்து வியர்க்குரு உள்ள இடத்தில் தினமும் தடவி வர வியர்க்குரு குறையும்.
தாழம் பூவை சுட்டு அந்த சாம்பலை எடுத்து தினமும் புண்ணின் மீது தடவி வர புண் ஆறும்.
குப்பை மேனி, உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து சொறிசிரங்கு உள்ள இடத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து...
ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் உடம்பில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய் குறையும்.
வெள்ளறுகு இலையை அரைத்து தினமும் உடம்பில் பூசி 20 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வர சொறி சிரங்கு குறையும்.
முருங்கை இலைச் சாறுடன் சிறிதளவு உப்பு சேர்த்து தினமும் 2 வேளை கருப்பு நிறப்படையின் மீது தடவினால் படை நீங்கும்.
துத்தி பூவை காய வைத்து பொடி செய்து கற்கண்டு, பால் சேர்த்து காய்ச்சி குடிக்க வாந்தி குறையும்.
திருநீற்றுப் பச்சிலை சாற்றுடன் கற்பூரவல்லிச் சாறு சேர்த்து தடவி வர தோல்அரிப்பு குறையும்.