இட்லி மிருதுவாக இருக்க
கொதிக்கும் தண்ணீரின் நடுவே காலையில் அரைத்த இட்லி மாவை வைத்திருந்து மாலையில் இட்லி ஊற்றினால் பூப் போல் மிருதுவாக இருக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
கொதிக்கும் தண்ணீரின் நடுவே காலையில் அரைத்த இட்லி மாவை வைத்திருந்து மாலையில் இட்லி ஊற்றினால் பூப் போல் மிருதுவாக இருக்கும்.
அரைத்த மாவை இட்லி தோசை தயாரிக்க உடனே பயன்படுத்தக்கூடாது. மாவு எட்டு மணி நேரமாவது புளிக்க வேண்டும். அப்போது தான் ருசியாக இருப்பதுடன்...
சூட்டோடு இருக்கும் உணவுப் பொருட்களில் எலுமிச்சைச்சாற்றை சேர்க்ககூடாது. அப்படி செய்தால் உணவு கசந்து விடும். சூடு அறிய பிறகு சேர்க்க வேண்டும்.
கோதுமை மாவுதோசைக்கு, மாலையில் சுடக் காலையிலேயே கரைத்து வைத்து விட்டால் தோசை கல்லில் ஒட்டாமல் வரும்.
வாழைப்பூ ஆயும் போது உப்பைக் கையில் தடவிக் கொண்டு ஆய்ந்தால் பிசு பிசுக்காது .
காய்ந்த மிளகாயுடன் உப்பு சேர்த்து மிசினில் அரைத்து வைத்துக் கொண்டால் ரோஸ்ட் சிப்ஸ் போட வசதியாக இருக்கும்.
தோசைப் பொடி அரைக்கும் போது ஒரு ஸ்பூன் சீரகத்தை வறுத்துப் பருப்புடன் சேர்த்து அரைத்தால் வாசனையாக இருக்கும்
காப்பி டிக்காசன் அதிகமாகி விட்டால் அதில் கொஞ்சம் சர்க்கரையை போட்டு விடுங்கள். மறுநாள் உபயோகிக்கும் போது புதிய டிக்காசன் மாதிரி இருக்கும்.
உப்பு கரைத்த நீரில் கிழங்கு வகைகளை ஒரு 10 நிமிட நேரம் ஊற வைத்து எடுத்து வேக விட்டால் சிக்கிரம் வெந்து...