வெந்தயக்குழம்பு
வெந்தயக்குழம்பு கொதிக்கும் போது இரண்டு உளுந்து அப்பளங்களைப் பொரித்து நொறுக்கிப் போட்டுக் குழம்பை இறக்கவும்.
வாழ்வியல் வழிகாட்டி
வெந்தயக்குழம்பு கொதிக்கும் போது இரண்டு உளுந்து அப்பளங்களைப் பொரித்து நொறுக்கிப் போட்டுக் குழம்பை இறக்கவும்.
வெண்டைக்காய் வதக்கும் போது உதிரி உதிரியாக இருக்க இரண்டு ஸ்பூன் மோரோ அல்லது புளித்தண்ணிரோ தெளித்து வதக்கினால் போதும்.
சேப்பங்கிழங்கு ரோஸ்ட் செய்யும் போது கடலைமாவைப் புளித்த தயிரில் கலந்து சேப்பங்கிழங்குடன் சேர்த்து செய்தால் மொரு மொரு வென்று இருக்கும்.
அரிசி கழுவிய தண்ணீரில் கிழங்குகளை வேக வைத்தால் சிக்கிரம் கிழங்குகள் வேகும்.
சேம்பு, பிடிகருணை ஆகியவற்றை இட்லித்தட்டில் வேகவைத்தால் குழையாது.
காலிபிளவர், முட்டைகோஸ் இவைகளை வேகவைகுள் போது ஒரு துண்டு இஞ்சியைச் சேர்த்து வேகவிட்டால் நாற்றம் இல்லாமல் சுவையாக இருக்கும்.
துவரம்பருப்பு வேக வைக்கும் போது பருப்போடு ஒரு தேக்கரண்டி வெந்தயத்தையும் சேர்த்து வேக வைத்தால் சாம்பார் நல்ல வாசனையாக இருப்பதோடு கெட்டுப்...
துவரம்பருப்பை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துப் பின் வேக வைத்தால் சிக்கிரம் வெந்து விடும்.
துவரம் பருப்பு வேக வைக்கும் போது தேங்காய்த்துண்டு ஒன்றை நறுக்கிப் போடவும். பருப்பு விரைவில் வெந்து வெண்ணெய் போல் குழைவாகவும் இருக்கும்.