சிரங்கு புண் குறைய
உத்தாமணி இலை, வேப்ப எண்ணெய் சேர்த்து நன்றாக காய்ச்சி ஆறிய பின் தடவி வர சிரங்கு புண் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
உத்தாமணி இலை, வேப்ப எண்ணெய் சேர்த்து நன்றாக காய்ச்சி ஆறிய பின் தடவி வர சிரங்கு புண் குறையும்.
எள்ளை தண்ணீர் சேர்த்து அரைத்து சூடுபடுத்தி வலியுள்ள இடத்தில் தடவ உடல் வலி குறையும்.
கோரைக்கிழங்கு பொடியை அரை தேக்கரண்டி அளவில் எடுத்து வெந்நீரில் கலந்து தினம் 2 லிருந்து 3 தடவை குடிக்க தசை வலி...
வெற்றிலைச்சாறு 5 மில்லியுடன் இஞ்சிச் சாறு 5 மில்லி கலந்து தினமும் காலை வேளையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நுரையீரல்...
கார்போக அரிசி விதைகளை பசும்பால் விட்டு அரைத்து உடலில் தேய்த்துக் குளித்தால் உடலில் சிரங்குபுண் குறையும்.
கொள்ளுக்காய் வேளை வேருடன் சம அளவு மஞ்சள் சேர்த்து பசுவின் பால் விட்டு அரைத்து வீக்கத்திற்குப் போட வீக்கம் குறையும்.
செண்பகப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.
இரண்டுபிடி வெட்டிவேரை நன்கு காய்ச்சி அந்தநீரில் திருநீற்றுப்பச்சிலையைப் போட்டு வைத்து வெயில் நேரத்தில் குடித்து வர, சூட்டினால் உண்டான தேக எரிச்சல்...
அத்தி மரப்பட்டை, அரசம் பட்டை எடுத்து வேப்பெண்ணெயில் காய்ச்சி தடவ காயம் குறையும்.
வேம்பின் பட்டை,பூவரசம் பட்டை இரண்டையும் தூள் செய்து அதனுடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வர தோல் நோய்கள் குறையும்.