பாட்டிவைத்தியம் (naturecure)
குடல் சுத்தம்
காலை உணவு அருந்துவதற்கு முன் ஒரு வில்வ பழத்தின் சதை பகுதியுடன் சர்க்கரை சேர்த்து உண்ணவும்.
கை நடுக்கம் குணமாக
வெள்ளைத்தாமரை இதழ்களை கசாயம் வைத்து பாலுடன் கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கை நடுக்கம் குணமாகும்.
பருத்த வயிற்றைக் குறைக்க
இஞ்சிச் சாறை கொதிக்க வைத்து அதே அளவு தேன் ஊற்றி ஆற வைத்து தினசரி காலையிலும், மாலையிலும் உணவுக்குப் பின் சாப்பிட்டு...
மேல் வயிற்றுவலி குறைய
நிலக்குமிழ் வேர், சிறுதேக்கு, நிலவேம்பு, கொட்டை நீக்கிய கடுக்காய், தோல் நீக்கிய சுக்கு, நார் நீக்கப்பட்ட கோரைக்கிழங்கு, தோல் நீக்கிய வசம்பு...
வயிற்றுப்போக்கு
ஒரு மாதுளை பழத்தின் சுளைகளை நன்றாக வேக வைத்து அதனுடன் இரண்டு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிடவும்.
வயிற்றுக்கடுப்பு
ஒரு கையளவு தொட்டாசிணுங்கி இலையை நன்றாக அரைத்து ஒரு குவளை தயிறுடன் கலந்து காலை உணவிற்கு முன் பருகவும்.
வயிற்றுப் பூச்சிகள்
மாங்கொட்டை பருப்பை நன்றாக தூள் செய்து கொள்ளவும். ஒரு தேக்கரண்டி மாங்கொட்டை பொடியுடன் தேன் கலந்து உண்ண வயிற்றுப் பூச்சிகள் குணமாகும்.