பழைய பிரஷ்ஷின் பயன்
பயன்படுத்திய ஷேவிங் பிரஷ்ஷை தூக்கி எரிந்து விடாமல் ரேடியோ, டி.வி, டேப்ரிக்கார்டர் போன்றவற்றில் உள்ள கைவிரல் புகாத பகுதிகளை சுத்தம் செய்யப்...
வாழ்வியல் வழிகாட்டி
பயன்படுத்திய ஷேவிங் பிரஷ்ஷை தூக்கி எரிந்து விடாமல் ரேடியோ, டி.வி, டேப்ரிக்கார்டர் போன்றவற்றில் உள்ள கைவிரல் புகாத பகுதிகளை சுத்தம் செய்யப்...
வீட்டு வெளிப்புற கேட்டில் தாழ் வந்து விழும் இடத்தில் சைக்கிள் ட்யூபைக் கத்தரித்துச் சுற்றி வைத்தால் சத்தம் வருவது தவிர்க்கப்படும்.
திரைச்சீலையில் கிழே சிறு சிறு மணிகளைப் பொருத்தினால் அவை அசைகின்ற போதெல்லாம் இனிய நாதத்தைக் கேட்கலாம்.
மல்லிகை மொட்டுக்களைத் தண்ணீரில் போட்டுப்பின் கட்டினால் அதிக நேரம் பூ விரியாமல் இருக்கும்.
பழைய டூத் பிரஷ்ஷை பிரஷர் குக்கர் மூடி, புட்டிகள் போன்ற விரல் நுழைய முடியாத இடங்களில் சுத்தப்படுத்த உபயோகிக்கலாம்
கொலுசு திருகாணியில் சிறிது பெவிக்கால் தடவித் திருகிவிட்டால் கழலாமல் இருக்கும்.
பால் பாயிண்ட் பேனா எழுதவில்லை என்றால் கண்ணாடி மேல் கொஞ்ச நேரம் தேய்த்தால் மறுபடியும் எழுத ஆரம்பித்து விடும்.
பால் பாயிண்ட் பேனா ரீபில் எழுதாவிட்டால் கொதிக்கும் சுடுநீரில் போட்டு எடுத்தால் நன்றாக எழுதும்.
பலாப்பழத்தை நருக்கிச் சுளை எடுப்பதற்கு முன் கையில் எண்ணெய் தடவிக் கொண்டால் பழத்திலுள்ள பால் கையில் ஒட்டிக் கொள்ளாமல் இருக்கும்.
முழுத்தேங்காயை, குடுமி மேற்புறமாய் இருக்கும் விதம் நிற்க வைத்தால் நிறைய நாள் கெடாமல் இருக்கும்.