கீறல் மறைய
தொலைபேசியைத் துடைக்கும் போது ஒரு சிறு பஞ்சில் சிறிது வாசனைத் திரவியத்தை நனைத்துத் துடைத்தால் கீறல் மறைந்து விடும்.
வாழ்வியல் வழிகாட்டி
தொலைபேசியைத் துடைக்கும் போது ஒரு சிறு பஞ்சில் சிறிது வாசனைத் திரவியத்தை நனைத்துத் துடைத்தால் கீறல் மறைந்து விடும்.
பிய்ந்து போன செருப்புகளை தூர எரிந்து விடாமல் அதை சதுரமாக நறுக்கி மரசாமான்களின் அடியில் ஆணியால் அடித்து வைத்தால் தரையில் இழுக்கும்...
பீங்கான் தட்டுகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைக்கும் போது ஒவ்வொரு தட்டின் மீதும் ஒரு துணி அல்லது டிஷ்யூ பேப்பர்...
பிளாஸ்டிக் செருப்புகள் சில சமயம் காலைக்கடித்தால் நன்றாக தண்ணீரில் ஊற விடவும்.
பூட்டு துருப்பிடித்து விட்டால் சாவிக்கு எண்ணெய் போட்டால் எளிதில் திறக்க வரும்.
புதுச் செருப்பு வாங்கி அதன் உட்புறம் எண்ணெய் பூசிய பின்பு போட்டால் புதுச் செருப்பு காலைக் கடிக்காது.
சிவப்பு எறும்பு கடித்த இடத்தில் உப்புப் போட்ட இளஞ்சூடான நீரை விட்டு அலம்பினால் வலி மறைந்து விடும்.
காலில் அட்டைப்பூச்சி ஒட்டிக்கொண்டால் சிறிது உப்பையோ புகையிலையையோ போட்டால் பூச்சி சுருண்டு விடும்.
ரப்பர் பேன்ட் வைத்திருக்கும் டப்பாவில் சிறிது டால்கம் பவுடரைத் தூவி வைத்தால் அவை ஒன்றோடு ஒன்று ஒட்டிக் கொள்ளாது.
தோலால் செய்யப்பட்ட சூட்கேசை உபயோகம் இல்லாமல் வைத்திருந்தால் ஒரு சோப்புத் துண்டை போட்டு வைத்தால் பூச்சி வராது. நாற்றமும் வராது.