ஆணி அடித்த துளை மறைய
வீட்டுச் சுவரில் ஆணி அடித்த துளை இருந்தால் சாக்பீசை சீவித் துளைகளில் அமுக்கி அதன் மீது வெள்ளை அடித்தால் துளை மறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
வீட்டுச் சுவரில் ஆணி அடித்த துளை இருந்தால் சாக்பீசை சீவித் துளைகளில் அமுக்கி அதன் மீது வெள்ளை அடித்தால் துளை மறையும்.
நெல்லி மரத்தின் கிளை ஒன்றை வெட்டி கிணற்றில் போட்டு வைத்தால் உப்பு நீர் மாறி விடும்.
புதிய பெல்ட் வாங்கியவுடன் மேலும் சில துளைகள் போட வேண்டி இருந்தால் பழுக்கக் காய்ச்சிய தடிமனான ஊசியைத் வைத்தால் துளை உண்டாகும்.
விரும்பிய முறையில் தலைவாரிக் கொள்ளக் சீப்பைத் தண்ணீரில் நனைத்த பிறகு தலை வாரினால் எளிதாக வாரிக்கொள்ள இயலும்.
துடைப்பம் வாங்கியதும் உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் ஊறவைத்து விட்டுப் பின் உலர வைத்துப் பயன்படுத்தினால் நீண்ட நாள் பயன்படுத்தலாம்.
நெருப்புப் பட்டு விட்டால் உருளைக்கிழங்கை அரைத்துப் பூசினால் எரியாது. கொப்பளிக்காது.
அரைத்த மாவு சற்று சூடாக இருக்கும். காகிதத்தில் கொட்டிப் பரப்பிச் சூடு நன்றாக ஆறிய பிறகே டப்பாவில் நிரப்பி வைக்க வேண்டும்.
கண்ணாடி வளையல்கள் வாங்கியவுடன் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்தப் பிறகு அணிந்து கொண்டால் நீண்ட நாட்களுக்கு உடையாமல் இருக்கும்.
ஆடைகள் தைத்து மீதம் விழும் துணிகளை ஒன்று சேர்த்து ஒரு கொத்தான நூலினால் கட்டி ஒரு மரக்குச்சியில் வைத்துக் கட்டி வைக்க...
ஷேவிங் பிரஷ் பழையதாகி விட்டால் குழந்தைகளின் ஷூவிற்குப் பாலிஷ் போட உபயோகிக்கலாம்.