வாத வலி, வீக்கம் குறைய
வேலிப்பருத்தி இலைச்சாற்றுடன் சுக்கு, பெருங்காயம் பொடித்து காய்ச்சி இளஞ்சூட்டில் பற்றிட வாத வலி, வீக்கம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
வேலிப்பருத்தி இலைச்சாற்றுடன் சுக்கு, பெருங்காயம் பொடித்து காய்ச்சி இளஞ்சூட்டில் பற்றிட வாத வலி, வீக்கம் குறையும்.
பூனைக்காலி வேரை முறைப்படி கஷாயமிட்டு முப்பது மி.லி.முதல் அறுபது மி.லி. வீதம் அருந்தி வர வாதம் குறையும்.
வேலிப்பருத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து எலுமிச்சை சாறு கலந்து பூசி வந்தால் வாதவலி குறையும்.
வேலிப்பருத்தி இலையைப் அரைத்து சாறு எடுத்து அதனுடன் இஞ்சிச் சாறு கலந்து சாப்பிட்டு வந்தால் வாத நோய் குறையும்.
நல்லவேளைக் கீரை, வாதநாராயணன் இலை, பூண்டு, மிளகு, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு சாப்பிட்டால் வாத நோய்கள் குறையும்.
பரட்டைக் கீரை, முடக்கத்தான் கீரை, வாதநாராயணன் கீரை மூன்றையும் சிறிது பூண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் வாதத்தால் ஏற்படும் வலிகள் குறையும்.