பல் வலி குறைய
துவரை இலைகளை நசுக்கிச் சிறிதளவு பல் வலி உள்ள இடத்தில் இரவில் அடக்கி வைத்துக் கொண்டால் பல் வலி குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
துவரை இலைகளை நசுக்கிச் சிறிதளவு பல் வலி உள்ள இடத்தில் இரவில் அடக்கி வைத்துக் கொண்டால் பல் வலி குறையும்.
சேஜ் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி வடிகட்டி வாய் கொப்பளித்து வந்தால் தொண்டை வலி மற்றும் பல் வலி குறையும்.
சர்க்கரை வேம்பு இலைகளை கசாயம் போல செய்து வாய் கொப்பளித்து வந்தால் பல் வலி குறையும்.
ஆலமரத்தின் மொட்டுகளை எடுத்து அடிக்கடி நன்றாக மென்று வாயிலேயே அடக்கி வைத்து பிறகு துப்பினால் பல் வலி குறையும்.
சுக்கு, காசுக்கட்டி, கடுக்காய்த்தூள், இந்துப்பு சமஅளவாக எடுத்து பொடி செய்து பல்பொடியாக பயன்படுத்த பல் ஆட்டம், பல் சொத்தை குறையும்.
கருவேல் இலைகளை நீரிலிட்டுக் காய்ச்சி, இந்நீரால் வாய் கொப்பளித்து வந்தால் பல் ஈறு பலம் பெறும்.
தாளிசப்பத்திரி இலைகளை உலர்த்தி காய வைத்துப் பொடி செய்து அந்த பொடியால் பல் துலக்கி வந்தால் பல் வலி குறையும்.