மருந்துகள் கையாளும் முறை
மூட்டைப்பூச்சி மருந்து ஓர் விஷம். அவற்றை அடித்தால் அடித்த நான்கு மணி நேரம் கழித்துத்தான் குழந்தைகளை அந்த அறைக்குள் அனுமதிக்க வேண்டும்.
வாழ்வியல் வழிகாட்டி
மூட்டைப்பூச்சி மருந்து ஓர் விஷம். அவற்றை அடித்தால் அடித்த நான்கு மணி நேரம் கழித்துத்தான் குழந்தைகளை அந்த அறைக்குள் அனுமதிக்க வேண்டும்.
மருந்துகளை சமையலறையில் உணவுப் பொருட்களுக்கு பக்கத்தில் வைக்கக் கூடாது. மூட்டைப்பூச்சி மருந்து, தலைவலி மாத்திரைகள், தூக்க மாத்திரைகள் ஆகியவைகளை தனியாக வைத்து...
கற்ப்பூரத்துடன் சில மிளகுகளை போட்டு வைத்தால் கற்பூரம் கரைந்து போகாமல் பல நாள் பாதுகாக்கலாம்.
மெழுகுவர்த்தி ஏற்றுவதற்கு முன்சுமார் மூன்று மணி நேரம் பிரிட்ஜில் வைத்து ஏற்றி வைத்தால் உருகி வழியாமல் இருக்கும்.
மெழுகு வர்த்திகளை குளிர்ந்த நீரில் வைத்து எரிய விட்டால் அதிகப் பிரகாசமாக எரியும்.
வெள்ளை கான்வாஸ் ஷுவை கழுவி சிறிது நீலம் கலந்த நீரில் முக்கி எடுத்து வெயிலில் காய வைத்தால் பளிச்சென்று இருக்கும்.
ஷுபாலிஷ் கெட்டியாகி விட்டால் அதைப் பொடி செய்து சிறிது டர்பென்டைன் ஊற்றிக் குழைத்து பூசலாம்.
சின்னக் குழந்தைகளின் ஷுக்களுக்கு தினம் பாலிஷ் போட அவகாசம் இல்லை என்றால் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் தடவினால் ஜொலிக்கும்
புது செருப்பு, ஷு உட்புறம் புளித்த தயிரை இரவில் தடவி வைத்துக் காலையில் துடைத்து விட்டால் தோல் மிருதுவாகிவிடும்.
வத்தல், அப்பளங்களை வெயிலில் காய வைக்கும் போது காக்கைகள் தொந்தரவு வராமல் இருக்க கருப்புத் துணியையோ அல்லது குடையையோ வைக்க வேண்டும்.