கடுக்காய் பிஞ்சு, சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிவற்றை சம அளவு எடுத்து வெயிலில் காய வைத்து நன்றாக இடித்து பொடித்துக் கொள்ளவும். பிறகு நுண்ணிய துகளாக சலித்துக் கொள்ளவும். அதனுடன் சிறிதளவு வெல்லத்தை பொடித்து இரண்டையும் கலந்து சாப்பிட்டு வெந்நீர் அருந்தி வந்தால் இளைப்பு குறையும்.
குறிப்பு:
- இந்த மருந்தை சாப்பிடும் போது பழைய சோறு, வெள்ளரிக்காய், கத்தரிக்காய், மோர், நாரத்தம் பழம், தயிர், பச்சை வாழைப்பழம், அத்திப்பழம், ஜவ்வரிசி, பீர்க்கங்காய், இளநீர், மீன், எலுமிச்சம் பழம், கீரைத்தண்டு,அவரைக்காய், பூசணிக்காய், சுரைக்காய், புடலங்காய் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.
- தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இளைப்பு குறையும்.