உடலில் சிரங்கு புண் குறைய
தும்பைச் சாற்றுடன் சிறிது சோற்று உப்பு கலந்து கரைத்து உடலுக்குப் பூசி உலர விட்டுக் குளித்து வந்தால் சிரங்கு புண்,தேமல் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
தும்பைச் சாற்றுடன் சிறிது சோற்று உப்பு கலந்து கரைத்து உடலுக்குப் பூசி உலர விட்டுக் குளித்து வந்தால் சிரங்கு புண்,தேமல் குறையும்.
உத்தாமணி இலை, வேப்ப எண்ணெய் சேர்த்து நன்றாக காய்ச்சி ஆறிய பின் தடவி வர சிரங்கு புண் குறையும்.
கார்போக அரிசி விதைகளை பசும்பால் விட்டு அரைத்து உடலில் தேய்த்துக் குளித்தால் உடலில் சிரங்குபுண் குறையும்.
கடுக்காயையும் மஞ்சளையும் சம அளவு எடுத்து அரைத்துப் பூச புண்கள் குறையும்.
அமுக்கிராங்கிழங்கு இலைகளை நன்றாக அரைத்து புண்கள் மேல் கட்டி வந்தால் புண்கள் குறையும்.
எருக்கு இலைகளை உலர்த்தி காய வைத்துப் பொடி செய்து அந்த பொடியைப் புண்களின் மேல் தூவப் புண்கள் குறையும்.
நொச்சி இலைகளை தேங்காய் எண்ணெயில் போட்டுக் காய்ச்சி, இந்த எண்ணெயைப் புண்களில் பூசி வந்தால் புண்கள் குறையும்.
வெண்டை இலைகளை அரைத்துக் கட்டிகள் மற்றும் புண்கள் மேல் பூசி வந்தால் இவை குறையும்.
தேங்காய் எண்ணெய் மற்றும் மெழுகு இவற்றை சம அளவு எடுத்து அடுப்பில் வைத்து காய்ச்ச மெழுகு உருகிவிடும். பின் ஒரு சுத்தமான...
ஆடுதீண்டாப் பாளை இலைகளை பிழிந்து சாறு எடுத்து, வேப்பெண்ணெய் சேர்த்து காய்ச்சிப் புண்கள் மீது பூசி வந்தால் புண்கள் குறையும்.