புண்கள் குறைய
துத்தி இலைகளோடு, பூக்களைச் சேர்த்து அரைத்துப் புண்கள் மேல் கட்டி வந்தால் புண்கள் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
துத்தி இலைகளோடு, பூக்களைச் சேர்த்து அரைத்துப் புண்கள் மேல் கட்டி வந்தால் புண்கள் குறையும்.
தேள் கொடுக்கு இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து தேங்காய் எண்ணெயில் சேர்த்துக் காய்ச்சி புண்கள் மேல் பூசி வந்தால் புண்கள் குறையும்.
அல்லி இலைகளைத் தண்ணீரில் போட்டு, இத்தண்ணீரால் புண்களைக் கழுவி வந்தால் புண்கள் குறையும்.
பண்ணைக் கீரையை அரைத்துச் சாறு எடுத்து, புண்கள் மீது தடவினால் புண்கள் குறையும்.
சமஅளவு நல்வேளை இலை,தும்பை இலை,வெங்காயம் ஆகிய மூன்றையும் எடுத்து அரைத்துப் புண்கள் மேல் பூசி வந்தால் புண்கள் குறையும்.
பப்பாளி இலை மேல் விளக்கெண்ணெய் தடவி,இலைகளை நெருப்பில் லேசாக வாட்டி புண்கள் மேல் கட்டி வந்தால் புண்கள் குறையும்.
துத்திக் கீரையை அரைத்து சிறிது மஞ்சள் தூள் கலந்து புண்கள் மீது தடவினால், அவை குறையும்.
மஞ்சணத்தி இலைகளை அரைத்துப் புண்கள் மற்றும் சிரங்கு மீது பூசி வந்தால் புண்கள் குறையும்.