கீரை வாங்கும் போது கவனிக்க
கீரைத்தண்டு குட்டையானதாகவும் கிளைகள் நிறைய இருப்பதாகவும் இருக்க வேண்டும், இது நாறு இல்லாமல் இளசாக இருக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
கீரைத்தண்டு குட்டையானதாகவும் கிளைகள் நிறைய இருப்பதாகவும் இருக்க வேண்டும், இது நாறு இல்லாமல் இளசாக இருக்கும்.
வாழைத்தண்டு,சுரைக்காய், நூல்க்கோல் முதலிய காய்கள் நகம் வைத்தால் உள்ளே போவது போல் இருக்க வேண்டும். அது தான் பிஞ்சு.
காலிபிளவர் வாங்கும் போது இடைவெளி இல்லாமல் பூ இணைந்து வெண்மையாக இருப்பதை பார்த்து வாங்க வேண்டும்.
வெங்காயத்தை நைலான் பையில் போட்டு காற்றோட்டமாக கட்டி தொங்க விட்டால் நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும்.
வாடிப்போன கொத்தமல்லித் தழையை வெது வெதுப்பான நீரில் போட்டு எடுத்தால் பச்சை பசேல் என்று ஆகிவிடும்.
பச்சை மிளகாய் கெட்டுப்போகாமல் இருக்க கண்ணாடி பாட்டிலில் போட்டு சிறிதளவு மஞ்சள் பொடியை சேர்த்து காற்று போகாமல் இருக்கி மூடவும்.
இஞ்சியை ஈரத்துணியில் சுற்றி தண்ணீர் குடத்தின் மேல் வைத்தால் காயாமல் இருக்கும்.
கறிவேப்பிலை வாடாமல் இருக்க அலுமினிய பாத்திரத்தில் போட்டு தலைகிழாக கவிழ்த்து வைக்கவும் அல்லது ஈரத்துணியில் சுற்றி வைக்கவும்.