கண்கள் குளிர்ச்சி பெற
வெண்டைக்காயை உணவுடன் அடிக்கடி சேர்த்து வந்தால் கண்கள் குளிர்ச்சி பெரும்.
வாழ்வியல் வழிகாட்டி
வெண்டைக்காயை உணவுடன் அடிக்கடி சேர்த்து வந்தால் கண்கள் குளிர்ச்சி பெரும்.
பிரம்மதண்டு இலைசாறு மற்றும் பால் ஆகியவற்றை சேர்த்து 1 துளி அளவு கண்ணில் விட்டு வந்தால் கண்ணில் சதை வளர்வது குறையும்.
அத்திப்பூவை சாறெடுத்து தினசரி இரண்டு வேளை மூன்று நாள் கண்களில் விட்டுக் கொண்டு வந்தால் கண்பார்வை தெளிவாகும்.
சத்திசாரணை இலையை அரைத்து சாறு எடுத்து தாய்ப்பாலுடன் கலந்து கண்ணுக்கு மை போல இட நோய் நீங்கும்.
பொன்னாங்கண்ணி இலையை மென்று தின்று பால் பருகி வந்தால் கண் பார்வை தெளிவடையும்.
புளியம்பூவை அரைத்து கண்ணைச் சுற்றி பற்று போட்டு வந்தால் கண்வலி மற்றும் கண்சிவப்பு குணமாகும்.
வில்வம் தளிரை வதக்கி இளஞ் சூட்டுடன் கண்களின் மீது ஒத்தடம் கொடுத்தால் கண்சிவப்பு மற்றும் அரிப்பு குணமாகும்.
ஒரு பிடி அருகம்புல், 10 மிளகு, 2 கிராம் சீரகம் சேர்த்து அரைத்து பசும்பாலில் சாப்பிடவும்.