படுக்கை புண்கள் ஆற
அமுக்கிரான் கிழங்கு பொடியை பாலில் கலந்து படுக்கை புண் மீது பூசினால் புண் ஆறும்.
வாழ்வியல் வழிகாட்டி
அமுக்கிரான் கிழங்கு பொடியை பாலில் கலந்து படுக்கை புண் மீது பூசினால் புண் ஆறும்.
விராலி இலையில் நரம்புகளை நீக்கி விட்டு வதக்கி வீக்கத்தின் மீது வேப்பெண்ணெய் தடவி கட்டி வந்தால் மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆறும்.
கோபுரந்தாங்கி இலைச்சாறை நல்லெண்ணெயில் காய்ச்சி தலை முழுகி வந்தால் மண்டை கொதிப்பு குறையும்.
பிரண்டை எண்ணெய்யை தேய்த்து வந்தால் தலைவலி குறையும்.வெட்டுகாயம் சீக்கிரம் ஆறும்.
மரிக்கொழுந்து செடியின் பூவை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி தலைவலி உள்ள இடத்தில் வைத்துக்கட்ட வலி குணமாகும்.
வெற்றிலைக் காம்பு, இலவங்கம், ஏலக்காய் ஆகியவற்றுடன் சம அளவு பால் கலந்து அரைத்து சூடாக்கி நெற்றிப் பொட்டில் உச்சந்தலையில் தடவ குணமாகும்.