கயல்
இடுப்புவலி குறைய
நொச்சி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, அரை கரண்டி நெய், இரு சிட்டிகை மிளகுத்தூள் கலந்து பூச இடுப்புவலி குறையும்.
உடல் அரிப்பு குறைய
கீழாநெல்லி இலையுடன், சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து உடலில் பூசி அரைமணி நேரம் ஊறியபின் குளித்துவர உடல் அரிப்பு குறையும்.
உடல் வலுப்பெற
வெண்டைக்காயை சிறிதாக நறுக்கி மோரில் கலந்து வெயிலில் காயவைத்து வத்தலாக செய்து அதை வறுத்து உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் வலுப்பெறும்.
மஞ்சள் காமாலை குறைய
பூவரச மரத்தின் பழுத்த இலைகளுடன் 1 ஸ்பூன் சீரகம் சேர்த்து அரைத்துக் குடித்தால் மஞ்சள் காமாலை நோய் குறையும்.
பித்தம் குறைய
அடிக்கடி கேழ்வரகை பயன்படுத்தி கஞ்சி, அடை போன்ற உணவாக சாப்பிட பித்தம் குறையும்
உடல் வலிமை பெற
வெள்ளரி இலைகளை, சீரகத்துடன் வறுத்துப் பொ டி செய்து தண்ணீரில் கலந்து குடித்துவர உடல் வலிமை பெறும்.
வாந்தியில் ரத்தம் வருதல் குறைய
மந்தாரை மலர் மொட்டுகளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.அதனுடன் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அரை டம்ளர் எடுத்து சிறிதளவு சர்க்கரை கலந்து...