பொன்னுக்கு வீங்கி

இந்த நோயின் முதல் அறிகுறி குழந்தையின் காது பின்புறம் தோன்றும் வீக்கம் தான்.லேசான சுரமும் இருக்கும்.

குழந்தை ஆகாரம் சாப்பிட முடியாமல் அவதிப்படும். நாவறட்சியும், தாகமும் இருக்கும். பார்லிக்கஞ்சி , குளுக்கோஸ் நீர் தான் கொடுக்க வேண்டும்.

மருந்து

1. வேப்பிலையை சிறிது மஞ்சளுடன் சேர்த்து அரைத்து வீக்கத்தின் பேரில் தடவ வேண்டும்.

2. விவரம் தெரிந்த குழந்தையானால் உப்பு நீரில் நான்கு மணிக்கு ஒருதரம் (தொண்டை வரை போகும் படி ) வாய் கொப்பளிக்க வேண்டும்.

 

Show Buttons
Hide Buttons