குழந்தைக்கு சாதாரணமாகத் தேமல், படர்தாமரை, உண்டாகும். கரப்பான் ரோகத்தைப் போல இதில் புண்கள் உண்டாவதில்லை. இது சருமத்தில் இருந்து உயரமாக இருக்கும். மத்தியில் பள்ளமாகவும் இருக்கும். தேமல் வட்டமாக ஓரங்கள் மட்டும் கனத்துப் பார்வைக்கு விகாரமாக இருக்கும். ஓரத்திலுள்ள தடிப்புகள் சிவந்திருக்கும். நமைச்சல் அதிகமாக இருக்கும்.
மருந்து
1. வெற்றிலையையும், வெள்ளைப் பூண்டையும் சமமாக அரைத்துப் பூசலாம்.
2. புரசன் விதையை எலுமிச்சைச் சாறு விட்டு அரைத்துப் பூசலாம்.
3. தகரை விதையை எலுமிச்சைச் சாறு விட்டு அரைத்துப் பூசலாம்.