ஈரல்குலைக் கட்டி

மருந்து 1

சிற்றரத்தை  – 15 கிராம்
கிராம்பு – 15 கிராம்
தேசாவரம் – 15 கிராம்
தேக்கு – 15 கிராம்
பாவட்டை வேர் – 10 கிராம்
உத்தாமணி வேர் – 10 கிராம்
விஷ்ணுகிரந்தி – 10 கிராம்
தும்பை – 10 கிராம்
துளசி – 15 கிராம்

இவற்றை ஒன்று சேர்த்து ஒரு லிட்டர் நீரிலிட்டு கால் லிட்டராக சுண்டக் காய்ச்சிய கசாயத்தில் வேலைக்கு அரை முதல் ஒரு அவுன்சு வீதம் கொடுக்க குணமாகும்.

மருந்து 2

திப்பிலி மூலம் – 15 கிராம்
தேவதாரு – 15 கிராம்
வெட்பாலைப் பட்டை – 15 கிராம்
வாய்விளங்கம் – 15 கிராம்
பால் சாம்பிராணி – 15 கிராம்
கண்டுபாரங்கி – 15 கிராம்
கரிசலாங்கண்ணி – 15 கிராம்
கடுக்காய்த் தோல் – 15 கிராம்
சிறுவழுதலை – 15 கிராம்
பெருவழுதலை – 15 கிராம்
வசம்பு – 15 கிராம்
பொன் முசுட்டை – 15 கிராம்
சுக்கு – 15 கிராம்
மிளகு – 15 கிராம்
திப்பிலி – 15 கிராம்
கொடிவேலி – 15 கிராம்
மதுக்காரை – 15 கிராம்
கோஷ்டம் – 15 கிராம்
சித்தரத்தை – 15 கிராம்
ஓமம் – 15 கிராம்
கருநொச்சி – 15 கிராம்
நிலவேம்பு – 15 கிராம்
செவ்வியம் – 15 கிராம்

இவற்றை ஒன்று சேர்த்து போடி செய்து இரண்டு லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக சுண்டக் காய்ச்சிய கசாயத்தில் மூன்று வேளை அரை அவுன்சு வீதம் கொடுக்க குணமாகும்.

 

Show Buttons
Hide Buttons