மருந்து 1
தினசரி இரண்டு வேளை சுட்ட இலுப்பை அரப்பினால் நன்றாகத் தேய்த்துக் கழுவிய பிறகு நீரடிமுத்தும், சந்தனமும் சமமாக அரைத்து பூசி வர வேண்டும்.
மருந்து 2
மருதாணி இலையையும், கொஞ்சம் மஞ்சளையும் சேர்த்து அரைத்து அந்த விழுதை சொறி சிரங்கின் மேல் அப்பி, 4 மணி நேரம் கழித்துக் கழுவி, திரும்ப பற்று போட வேண்டும்.
மருந்து 3
வேம்பாடம்பட்டை – 50 கிராம்
ஆரரிசி – 50 கிராம்
தேங்காய் நெற்று – 15 கிராம்
வசம்பு – 15 கிராம்
கருஞ்சீரகம் – 15 கிராம்
மஞ்சள் – 15 கிராம்
தேங்காய்எண்ணெய் – 1400 கிராம்
வேம்பாடம்பட்டை முதல் மஞ்சள் வரை அனைத்தும் குறைந்தது 6 மணி நேரம் ஊற வேண்டும். நன்றாக ஊறிய பிறகு அந்தத் தண்ணீரைக் கொண்டே தெளித்து அரைக்க வேண்டும். தேங்காயைத் திருகித் தண்ணீர் விடாது பால் எடுத்து, பாலுடன் எண்ணெயும், அரைத்த விழுதும் சேர்த்து, அடுப்பில் வைத்துப் பாத்திரத்தில் கசடு தட்டாமல் கிளறி விட்டுக் காய்ச்ச வேண்டும். அடியில் கசடு தட்ட எண்ணெய் நிற்கும். உடனே எண்ணெய்யை வடிகட்டி சீசாவில் பத்திரப்படுத்தவும்.
சொறி, சிரங்கு, கரப்பானுக்குத் தடவ உடனே குணமாகும்.