குழந்தைக்கு வரும் கரப்பான் இதுவும் ஒன்று. மூட்டுகளில் வீக்கம் கண்டு முரடு கட்டிப் புண் உண்டாகும். சுரமும் லேசாகக் காயும். கைகால் மூட்டுகளில் நமைச்சல் உண்டாகிப் புண்ணாக மாறும். முகம் வாடி கைகால், நீட்ட மடக்க குடியாதிருக்கும்.
மருந்து களில்
முடக்கொத்தான் சாறு – 6 அவுன்சு
வெங்காயச் சாறு – 4 அவுன்சு
சிற்றாமணக்கு எண்ணெய் – 1/2 லிட்டர்
கடுகு ரோகிணி – 15 கிராம்
ஆதண்டை வேர் – 15 கிராம்
சங்கன் வேர் – 15 கிராம்
புங்கன் வேர் – 15 கிராம்
இவற்றை பொடி செய்து போட்டு சாற்றையும் விட்டு ஒன்று சேர்த்து 8 மணி நேரம் கடும் வெயிலில் வைத்திருந்து , காலை, மாலை ஒரு தேக்கரண்டி அளவாகக் கொடுத்து வர வேண்டும்.
‘அக்கி’க்குரிய பூச்சு மருந்துகளில் ஒன்றை செய்து மேலே நன்றாகப் பூச வேண்டும்.