மூலிகைத் துவையல்

தேவையானப்பொருட்கள்:

கொத்தமல்லித் தழை- 1 கப்
புதினாத் தழை – 1 கப்
கறிவேப்பிலை இலை – 1 கப்
தூதுவளை இலை – 1 கப்
பிரண்டை – 1 கப்
இஞ்சி– 1 துண்டு
பூண்டு – 5 பல்
பச்சை மிளகாய் – 5
காய்ந்த மிளகாய் – 5
சின்னவெங்காயம் – 10
தக்காளி – 1
புளி பேஸ்ட் – 3 மேஜைக்கரண்டி
நல்லெண்ணெய் – 150 மி
கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் – தாளிப்புக்குத் தக்க
உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:

1.கொத்தமல்லி, புதினாத் தழைகளின் தண்டை நீக்கி சுத்தம் செய்து பொடித்து வைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலை இலையை ஆய்ந்து சுத்தம் செய்யவும். தூதுவளை இலையின் பின்புறம் லேசான முள் இருக்கும். முள்ளை நீக்கி சுத்தம் செய்யவும். 2.பிரண்டை குச்சிபோல் இருக்கும். நார் நீக்கி, உள் இருக்கும் சதைப்பற்றை மட்டும் எடுத்து சுத்தம் செய்யவும். இஞ்சி மிளகாயை நறுக்கிக் கொள்ளவும். எண்ணெய் தவிர எல்லாப் பொருட்களையும் மிக்ஸியில் இட்டு மைபோல் அரைத்து வைத்துக் கொள்ளவும்.
3.கடாயில் எண்ணெய் விட்டு, எண்ணெய் காய்ந்ததும் கடுகு, உளுந்து, பெருங்காயம் இட்டுத் தாளித்து, அரைத்து வைத்திருக்கும் பச்சைத் துவையலை சேர்த்துச் சுருள வதக்கி ஆறியதும் உலர்ந்த ஜாடியில் பத்திரப்படுத்தவும்.
4.இதை, சோற்றில் கலந்து பிசைந்து சாப்பிடலாம்.
5.சாம்பார்/ ரசம்/மோர் சாதத்திற்கு சூப்பர் கம்பினேஷன். பிரிஜ்ஜில் வைத்து 15 நாட்களுக்குப் பயன்படுத்தலாம்.

Show Buttons
Hide Buttons