அந்தகக் கணை

குழந்தைக்கு காய்ச்சல் அதிகமாகவும், கணைக்குரிய குறிகளோடும், முகம் மஞ்சளாகவும், மினுமினுப்பாகவும் இருக்கும். நாவறட்சி ஏற்படும்.

மருந்து

பொன்னாங்கண்ணி வேர் – 50 கிராம்
சிறுகீரை வேர் – 50 கிராம்
வரப்பூலா வேர் – 50 கிராம்
தேற்றா விதை – 50 கிராம்
கடுக்காய் – 50 கிராம்
அவுரி வேர் – 50 கிராம்
துளசி வேர்- 50 கிராம்
பசு வெண்ணெய் – 1/4 லிட்டர்

மூலிகைகளை ஒன்றாக மை போல அரைத்து வெண்ணெயுடன் கலந்து காய்ச்சி வடிகட்டி எடுத்து சீசாவில் பத்திரப்படுத்தவும். காலை, மாலை ஒரு தேக்கரண்டி அளவு கொடுத்து வரவும். மருந்தை தலையிலும் தடவி வரலாம்.

Show Buttons
Hide Buttons