வயிற்றுக் கோளாறுகள் குணமாக
புளியம்பூ, புளியஇலை, புளி இவற்றுடன் குறைந்த அளவு காரமும் சேர்த்து துவையலாக செய்து உண்டு வந்தால் வயிற்றுக் கோளாறுகள் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
புளியம்பூ, புளியஇலை, புளி இவற்றுடன் குறைந்த அளவு காரமும் சேர்த்து துவையலாக செய்து உண்டு வந்தால் வயிற்றுக் கோளாறுகள் குணமாகும்.
அம்மான் பச்சரிசி இலை, தூதுவளை இலை ஆகியவற்றை சேர்த்து துவையல் செய்து சாப்பிட தாது பலப்படும்.
தேங்காய் துவையலில் கசகசாவை சேர்த்து அரைத்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாது வலுப்பெறும்.
பிரண்டையை நெய் விட்டு வதக்கி துவையல் செய்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும்.மூலநோய் மற்றும் இரத்தக்கழிச்சல் தீரும். உடல் வலிமை பெரும்.
பொடுதலை, இஞ்சி , புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை துவையல் சுடுசோற்றுடன் நெய்யில் உண்ண நீங்கும்.
நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு அதாவது ஆஸ்துமா நோயாக இருந்தால் தூதுவளைக் கஷாயம் குடிக்கலாம்.தூதுவளை துவையல் செய்து சாப்பிடலாம்.மேலும் தூதுவளை மூளை நரம்புகளுக்கு...