பாலுண்ணி குறைய
புளிச்சக்கீரை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, மிளகுத் தூள் கலந்து வெண்ணெயில் குழைத்து மரு, பாலுண்ணி மேல் போட்டு வந்தால் அவை...
வாழ்வியல் வழிகாட்டி
புளிச்சக்கீரை இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, மிளகுத் தூள் கலந்து வெண்ணெயில் குழைத்து மரு, பாலுண்ணி மேல் போட்டு வந்தால் அவை...
துத்தி இலைகளோடு, பூக்களைச் சேர்த்து அரைத்துப் புண்கள் மேல் கட்டி வந்தால் புண்கள் குறையும்.
அம்மான் பச்சரிசி கீரை, வெள்ளெருக்கு இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட்டால் தோல் நோய்கள் குறையும்.
பருப்புக் கீரையுடன், குடை மிளகாய், வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சேர்த்து அவித்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பெறும்.
பண்ணைக் கீரையை அரைத்துச் சாறு எடுத்து, புண்கள் மீது தடவினால் புண்கள் குறையும்.
பிண்ணாக்குக் கீரை சாறில் அமுக்கரா கிழங்கை ஊற வைத்து, பிறகு காய வைத்துப் பொடியாக்கிச் சாப்பிட்டால், உடல் பலம் அதிகரிக்கும்.
துத்தி இலைகளை அரிசி மாவுடன் சேர்த்து வேகவைத்துக் கட்டிகள் மேல் கட்டி வந்தால் கட்டிகள் விரைவில் பழுத்து உடையும்.