உடல் சூடு குறைய
வெறும் வயிற்றில் ஓரிரு வல்லாரை இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
வெறும் வயிற்றில் ஓரிரு வல்லாரை இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் உடல் சூடு குறையும்.
அன்னாச்சி பழச்சாற்றுடன் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து நாள்தோறும் இருவேளை 15 மி.லி. குடித்து வந்தால் அதிக தாகம் குறையும்.
புளிய மரத்தின் கொழுந்து இலைகளை எடுத்து துவரம் பருப்புடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.
ஆரைக்கீரையை நிழலில் உலர்த்திப் பொடிசெய்து 30 கிராம் தூளை அரை லிட்டர் தண்ணீரில் பாதியாகக் காய்ச்சி பால், பனங்கற்கண்டு சேர்த்து பருக...
களா மர காயுடன் இஞ்சி சேர்த்து ஊறுகாயாக்கி உணவுடன்கொள்ள, அதிக தாகம் குறையும்.
நத்தைச் சூரியின் விதையை வறுத்துப் பொடியாக்கி தண்ணீரில் போட்டுக் காய்ச்சி வடிகட்டி பால், கற்கண்டு சேர்த்து இரண்டு வேளை குடித்து வர...
கொடிப்பசலைக் கீரையுடன் சிறிது சீரகம் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் தீராத தாகம் குறையும்.
நெல்லிவற்றலை இரவு வெந்நீரில் ஊறவைத்து மறு நாள் காய்ச்சி வடித்து பால் சர்க்கரை சேர்த்து சாப்பிட்டுவர உடல்சூடு தணியும்.