மெழுகு வர்த்தி பிரகாசமாக எரிய
மெழுகு வர்த்திகளை குளிர்ந்த நீரில் வைத்து எரிய விட்டால் அதிகப் பிரகாசமாக எரியும்.
வாழ்வியல் வழிகாட்டி
மெழுகு வர்த்திகளை குளிர்ந்த நீரில் வைத்து எரிய விட்டால் அதிகப் பிரகாசமாக எரியும்.
வெள்ளை கான்வாஸ் ஷுவை கழுவி சிறிது நீலம் கலந்த நீரில் முக்கி எடுத்து வெயிலில் காய வைத்தால் பளிச்சென்று இருக்கும்.
ஷுபாலிஷ் கெட்டியாகி விட்டால் அதைப் பொடி செய்து சிறிது டர்பென்டைன் ஊற்றிக் குழைத்து பூசலாம்.
சின்னக் குழந்தைகளின் ஷுக்களுக்கு தினம் பாலிஷ் போட அவகாசம் இல்லை என்றால் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெய் தடவினால் ஜொலிக்கும்
புது செருப்பு, ஷு உட்புறம் புளித்த தயிரை இரவில் தடவி வைத்துக் காலையில் துடைத்து விட்டால் தோல் மிருதுவாகிவிடும்.
வத்தல், அப்பளங்களை வெயிலில் காய வைக்கும் போது காக்கைகள் தொந்தரவு வராமல் இருக்க கருப்புத் துணியையோ அல்லது குடையையோ வைக்க வேண்டும்.
விளக்கு வெளிச்சத்திற்குப் பூச்சிகள் வீட்டுக்குள் வருவதை தடுக்க எண்ணெய் தடவிய காகிதத்தை விளக்கிற்கு அருகில் கட்டி வைத்தால் பூச்சிகள் இதில் வந்து...
ஸ்டேப்பிள் செய்த பின்களைக் கழற்றக் கைவிரல்களைப் பயன்படுத்தாமல் ஸ்டேப்பிளரின் பின்பக்கம் உள்ள வளைந்த பகுதியைப் பயன்படுத்திப் பின்னைக் கழற்றலாம்.
பருத்தி புடவைகளுக்குக் கஞ்சி போடும் போது நீரில் கொஞ்சம் படிகாரத்தை சேர்த்து கொண்டால் புடவை நல்ல வெண்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
இழைக்கோலம் போட அரிசி ஊற வைக்கும் போது உளுத்தம் பருப்பையும் சேர்த்து அரைத்துப் போட்டால் பெயிண்டில் செய்தது போல் நான்கு, ஐந்து...