அப்பளம் கெடாமல் இருக்க
சிறிதளவு பெருங்காயத்தை அப்பளம் வைத்திருக்கும் டப்பாவில் போட்டு வைத்திருந்தால் அப்பளம் நீண்ட நாட்களுக்கு கெடாமலிருக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
சிறிதளவு பெருங்காயத்தை அப்பளம் வைத்திருக்கும் டப்பாவில் போட்டு வைத்திருந்தால் அப்பளம் நீண்ட நாட்களுக்கு கெடாமலிருக்கும்.
தேங்காய் உடைப்பதற்கு முன்னால் தண்ணீரில் நனைத்தால் நேர் பாதியாக உடைபடும். தேங்காய் துருவும் போது பிசிறுகள் பாத்திரத்தில் விழாது.
எண்ணெய்ப் பலகாரம் செய்யும் போது எண்ணெய் பொங்கி வழிந்தால் கறிவேப்பிலை அல்லது சிறிது புளியோ போட்டு பயன்படுத்தினால் எண்ணெய் பொங்குவதையும், காறல்...
டப்பாவில் கொஞ்சம் பச்சைக் கற்பூரத்தைப் பேப்பரில் மடித்து வைத்து மேலே லட்டுகளை வைத்தால் நல்ல வாசனையாக இருக்கும்.
இன்ஸ்டன்ட் மாவு மூலம் குலோப்ஜாமுன் தயாரிப்பவர்கள் மாவைக் கலக்கும் போது சிறிதளவு வெண்ணெய் சேர்த்து விட குலோப்ஜாமுன் மிருதுவாக இருக்கும்.
பொரித்தெடுத்த ஜாமுன்களை சூடான சர்க்கரை பாகில் சேர்க்காமல் நன்கு ஆறிய பிறகு சேர்க்கவும். ஜாமுன்கள் விரியாமல் கரையாமல் சுவையாக இருக்கும்.
தேங்காய் பர்பி செய்து இறக்கும் போது சிறிது கடலை மாவைத் தூவிக் கிளறி இறக்கினால் நன்கு சேரும். சுவை அதிகமாக இருக்கும்.
சேமியா செய்யும் பொது 2 சிட்டிகை சாதிக்காய் துருவலைச் சேர்த்து இறக்கினால் சுவையாக இருக்கும்.
பக்கோடா செய்யும் போது நிலக்கடலைப் பொடி செய்து கலந்தால், மொரு மொருப்பும், ருசியும் கிடைக்கும்.
உருளைக்கிழங்கை சீவி ஒரு வெள்ளைத் துணியில் கட்டி கொதிக்கும் நீரில் ஐந்து நிமிடம் அமிழ்த்து வைத்து எடுத்த பிறகு குளிர்ந்த உப்பு...