உடல் வலி குறைய
அரைக் கீரையுடன் பூண்டு, மிளகும் தக்க அளவு சேர்த்து குழம்பு வைத்து சாப்பிடடால் உடல் வலி குறையும் .
வாழ்வியல் வழிகாட்டி
அரைக் கீரையுடன் பூண்டு, மிளகும் தக்க அளவு சேர்த்து குழம்பு வைத்து சாப்பிடடால் உடல் வலி குறையும் .
வாதநாராயணன் இலையைப் போட்டு தண்ணீரில் கொதிக்க வைத்து குளிக்க உடம்புவலி குறையும்.
திருநீற்றுப் பச்சிலை, துளசி, வேப்பங்கொழுந்து இவை மூன்றையும் நன்கு அரைத்து பாசிப்பயறு, பொடி கலந்து தேய்த்துக் குளித்தால் வியர்வை நாற்றம் குறையும்.
கருஞ்செம்மை இலையைத் தேவையான அளவு எடுத்து அம்மியில் அறைத்து வெட்டுக் காயம் மேல் போட வெட்டுக் காயம் ஆறும்
அமுக்குராக் கிழங்கை பாலில் வேகவைத்து இடித்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.
கீழாநெல்லி இலை, வேர், காம்பு, மிளகு(9) இவற்றை தண்ணீர் விட்டு காய்ச்சி தினமும் குடிக்க உடல் அரிப்பு குறையும்.
முட்டையின் வெள்ளை கருவை எடுத்து ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து தினமும் காலையில் குடிக்க உடல் வலிமை பெறும்.
கசகசா , கருஞ்சீரகம், தென்னம் பூ இவைகளை நன்றாகக் அரைத்துத் தினமும் தேய்த்துக் குளித்து வர அரிப்பு குறையும்.