காயங்கள் குணமாக
வேப்பிலையுடன் சிறிது மஞ்சளையும் சேர்த்து அரைத்து காயத்தின் மீது போட காயங்கள் விரைவில் குணமாகும்.
வாழ்வியல் வழிகாட்டி
வேப்பிலையுடன் சிறிது மஞ்சளையும் சேர்த்து அரைத்து காயத்தின் மீது போட காயங்கள் விரைவில் குணமாகும்.
வெந்தயத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
ஓமத்தில் சூப் வைத்து அடிக்கடி குடித்தால் வந்தால் உடல் சோர்வு நீங்கி விடும்.
அத்திக்காயையும் பருப்பையும் சேர்த்து சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டுக்கு நல்லது.
ரோஜாமொக்கு, சுக்கு, ஏலக்காய், கொத்துமல்லி எடுத்து வறுத்து அரைத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தேக உஷ்ணம் நீங்கும்.
துளசியிலை, மிளகுப்பொடி, சுக்குப்பொடி இவைகளை தண்ணீரில் போட்டு கஷாயமாக்கி பாலும், சர்க்கரையும் சேர்த்துப் பருகி வந்தால் உடல் வலி தீரும்.
ஆவாரம் பூவை பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டு வர உடலுக்கு பலம் கூடும்.