செருப்பின் தோல் மிருதுவாக
புது செருப்பு, ஷு உட்புறம் புளித்த தயிரை இரவில் தடவி வைத்துக் காலையில் துடைத்து விட்டால் தோல் மிருதுவாகிவிடும்.
வாழ்வியல் வழிகாட்டி
புது செருப்பு, ஷு உட்புறம் புளித்த தயிரை இரவில் தடவி வைத்துக் காலையில் துடைத்து விட்டால் தோல் மிருதுவாகிவிடும்.
வத்தல், அப்பளங்களை வெயிலில் காய வைக்கும் போது காக்கைகள் தொந்தரவு வராமல் இருக்க கருப்புத் துணியையோ அல்லது குடையையோ வைக்க வேண்டும்.
விளக்கு வெளிச்சத்திற்குப் பூச்சிகள் வீட்டுக்குள் வருவதை தடுக்க எண்ணெய் தடவிய காகிதத்தை விளக்கிற்கு அருகில் கட்டி வைத்தால் பூச்சிகள் இதில் வந்து...
ஸ்டேப்பிள் செய்த பின்களைக் கழற்றக் கைவிரல்களைப் பயன்படுத்தாமல் ஸ்டேப்பிளரின் பின்பக்கம் உள்ள வளைந்த பகுதியைப் பயன்படுத்திப் பின்னைக் கழற்றலாம்.
பருத்தி புடவைகளுக்குக் கஞ்சி போடும் போது நீரில் கொஞ்சம் படிகாரத்தை சேர்த்து கொண்டால் புடவை நல்ல வெண்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
இழைக்கோலம் போட அரிசி ஊற வைக்கும் போது உளுத்தம் பருப்பையும் சேர்த்து அரைத்துப் போட்டால் பெயிண்டில் செய்தது போல் நான்கு, ஐந்து...
தேங்காய் எண்ணெயில் சுத்தமான உப்புக் கல்லைச் சிறிது போட்டு வைத்தால் எண்ணெய் பல நாட்கள் கெடாமல் இருக்கும்.
அலுமினியம், பித்தளை, பீங்கான் பத்திரங்களில் சிறிய ஓட்டைகள் விழுந்திருந்தால் சிறிது துணியை எரித்துச் சாம்பலாக்கி, சுண்ணாம்புக் குழைத்து ஓட்டை உள்ள இடங்களில்...
அலுமினியப் பாத்திரங்களில் உப்பு, புளி இவைகள் கலந்த பொருட்களை வைத்திருக்ககூடாது.உப்பிலும், புளியிலும் அலுமினியம் கரையும்.
அடுப்பில் ஏற்றும் பாத்திரங்கள் வெளிப்புறத்தில் அரிசி மாவு, தவிடு, சாம்பல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றினைப் பூசி வைத்தால் அதில் கரி பிடிக்காது.