வீட்டுக்குறிப்புகள்
February 1, 2013
February 1, 2013
பாசி நீங்க
குளியலறையில் பாசி படித்திருந்தால் கோலப்பவுடரை தூவி தேய்த்தால் பளிச்சென்று இருக்கும். அல்லது கல் சுண்ணாம்பைக் கரைத்து பூசினாலும் நீங்கும்.
February 1, 2013
தரை வழுக்காமல் இருக்க
பாத்ரூம் தரை வழுக்கினால் டிக்காஷன் போட்டு பில்டரில் மீந்துள்ள காப்பி தூளைக் கொண்டு கழுவினால் போதும்.
February 1, 2013
அழுக்கு நீங்க
பாத்ரூம் டைல்ஸ்களில் அழுக்குப் படிந்தால் ஒரு பங்கு வினீகருக்கு நாலு பங்கு தண்ணிரை கலந்து கழுவி விடவும்.
February 1, 2013
தரை வெண்மையாக இருக்க
தரை பழுப்பாக இருந்தால் நீலப் பொடியை மூட்டையாகக் கட்டி தண்ணிரில் போட்டுத் துடைத்தால் தரை வெண்மையாக மாறும்.
February 1, 2013
தரை பளபளப்பாக
மொசைக் தரையில் உள்ள கறை போக கொஞ்சம் மண்ணெண்ணெய்யை கறை உள்ள இடத்தில் தெளித்து துடைத்தால் தரை பளபளப்பாகும்.
February 1, 2013
கம்பளி உடை சுருங்காமல் இருக்க
கம்பளி உடை நீரில் போட்டு சுருங்கினால் தண்ணிரில் ஒரு டீஸ்பூன் கிளிசரினை கலந்து விட்டால் சுருங்காது.