கட்டிகள் குறைய
ஊமத்தை இலைகளை எருமை பாலிலிருந்து கிடைக்கும் வெண்ணெயில் அரைத்து அக்கி கட்டிகள் மேல் பூசி வந்தால் அக்கி கட்டிகள் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
ஊமத்தை இலைகளை எருமை பாலிலிருந்து கிடைக்கும் வெண்ணெயில் அரைத்து அக்கி கட்டிகள் மேல் பூசி வந்தால் அக்கி கட்டிகள் குறையும்.
ஏழிலைப்பாலை இலைகளை உலர வைத்துப் பொடியாக்கி அந்த பொடியை நன்கு வறுத்து சீழ் வடியும் புண்களின் மேல் தூவி வந்தால் புண்கள்...
அரைக்கீரையை நன்கு சுத்தம் செய்து நெய்விட்டு சமைத்து சாப்பிட்டு வந்தால் சளியினால் ஏற்படும் காய்ச்சல் குறையும்.
பாதாம்பருப்பு, வேர்க்கடலை, தேங்காய், எள் உருண்டை ஆகியவற்றைச் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்பு உண்டாகும்.
குப்பைமேனி இலைகளோடு அருகம்புல் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து புண்கள் மீது பூசி வந்தால் புண்கள் குறையும்.
வாதுமை பருப்பு நான்கினை எடுத்து பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும்.
முற்றிய தேங்காய், கடலைப் பருப்பு, முந்திரிப் பருப்பு ஆகியவற்றை சிறிது நெய்விட்டு அரைத்து சர்க்கரை சேர்த்துச் சாப்பிட, இளைத்த உடல் பருக்கும்.
சின்ன வெங்காயத்தை அரிந்து மோரில் போட்டு சிறிது நேரம் ஊறியபின் கருப்பட்டியை சேர்த்து குடித்து வந்தால் அம்மைநோய் தாக்கம் குறையும்.
சுண்டை வற்றலை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய் குறைந்து நுரையீரல் வலுவடையும்.
செம்பருத்தி இலைகளை அரைத்து சாறு எடுத்து அதனுடன் சீரகப்பொடி கலந்து உடலில் உள்ள சொறிசிரங்கு , கரப்பான் ஆகியவற்றின் மேல் பூசி...