தலைபாரம் குறைய
நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
வாழ்வியல் வழிகாட்டி
நல்லெண்ணெயில் தும்பை பூவை போட்டு காய்ச்சி அடிக்கடி தலையில் தேய்த்து குளித்து வர தலைபாரம் குறையும்.
எலுமிச்சையுடன் இஞ்சி சேர்த்து சாறெடுத்து குடித்து வந்தால் ஒற்றைத் தலைவலி நீங்கும்.
செம்பருத்தி பூக்களை நல்லெண்ணெயை விட்டு காய்ச்சி வாரம் ஒருமுறை தேய்த்துக் குளியுங்கள். ஒற்றைத் தலைவலி பறந்து போகும்.
மிளகு, பூண்டு இவைகளை நல்லெண்ணெயில் போட்டு கொதிக்க வைத்து தலைக்கு குளித்து வர ஒற்றைத் தலைவலி குணமாகும்.
சிறு கீரை வேர், மிளகு, மஞ்சள் மூன்றையும் நறுக்கி நல்லெண்ணெயில் காய்ச்சி குளித்தால் குறையும்.
பொன்னாங்கண்ணி சாறு, சிறு கீரை சாறு, ஆவாரைகொழுந்து சாறு, பசுவின் நெய் ஆகியவற்றை ஒரு டம்ளர் எடுத்து கிராம்பு, மரமஞ்சள், ஏலரிசி,...
எட்டி மர துளிர் இலைகளை பறித்து பொடியாக நறுக்கி அதனுடன் மிளகு மற்றும் பூண்டு சேர்த்து ஒரு டம்ளர் நல்லெண்ணெய் விட்டுக்...
எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போட்டு வந்தால் ஒற்றைத் தலைவலி குறையும்.
10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவலியின் போது சாப்பிட ஒற்றைத் தலைவலி குறையும்.