உடல் உஷ்ணத்தை குறைக்க
வெந்தயத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
வெந்தயத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணத்தை குறைத்து குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
ஓமத்தில் சூப் வைத்து அடிக்கடி குடித்தால் வந்தால் உடல் சோர்வு நீங்கி விடும்.
வேப்பிலையை சுத்தம் செய்து கழுவி நிழலில் உலர வைத்து அரைத்து உடம்பிற்கு தேய்த்துக் குளித்தால் சரும நோய்கள் வராது.
மருதாணி எண்ணையை சருமத்தில் தடவி வந்தால் அரிப்பு நீங்கி பரிபூரண குணம் கிடைக்கும்
சுக்கும் சர்க்கரையும் போட்டுக் காய்ச்சிய நீரை குடித்து வந்தால் பித்தம் நீங்கும்.
அத்திக்காயையும் பருப்பையும் சேர்த்து சமைத்து அடிக்கடி சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டுக்கு நல்லது.
ரோஜாமொக்கு, சுக்கு, ஏலக்காய், கொத்துமல்லி எடுத்து வறுத்து அரைத்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் தேக உஷ்ணம் நீங்கும்.
நெல்லிப் பொடியை கஸ்தூரி மஞ்சளோடு சேர்த்து சருமத்தில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்து வந்தால் சரும வியாதிகள் குணமாகும்.