கண் இமைகள் எழில் பெற
வாரத்திற்கு இரண்டு முறை கண் இமைகளில் பன்னீரை தடவி வந்தால் இமைகளில் உள்ள சுருக்கம் நீங்கும்.இமைகள் கருமை நிறத்துடன் அழகாக இருக்கும்.
வாழ்வியல் வழிகாட்டி
வாரத்திற்கு இரண்டு முறை கண் இமைகளில் பன்னீரை தடவி வந்தால் இமைகளில் உள்ள சுருக்கம் நீங்கும்.இமைகள் கருமை நிறத்துடன் அழகாக இருக்கும்.
முழங்கை, முட்டிக் கால்கள் கருமை நிறமாக இருந்தால் எலுமிச்சம்பழச்சாற்றை தேய்த்து வந்தால் கருமை நிறம் மாறி சருமம் இயல்பான நிறமடையும்.
ஆரஞ்சுப்பழச்சாற்றினை முகத்தில் தேய்த்து பத்து நிமிடம் கழித்து கழுவினால் முகம் மாசு மருவற்று பட்டுப்போன்று மிருதுவாகவும் மினுமினுப்புடனும் இருக்கும்.
முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் ஜாதிக்காயை கல்லில் இழைத்து கரும் புள்ளிகள் உள்ள இடத்தில பூசி வந்தால் மறையும்.
வெள்ளரிக்காயை வெட்டி கண்களில் வைத்துக்கொண்டால் கண்களுக்கு நல்ல குளிர்ச்சியும், ஒளியும் கிடைக்கும்.
வெள்ளரிக்காயை அரைத்து சருமத்தின் மீது பூசி வந்தால் மென்மையும் பிரகாசமும் கூடும்.
எலுமிச்சம்பழச்சாற்றை அடிக்கடி ஏதாவது ஒரு விகிதத்தில் உள்ளுக்குள் சாப்பிட்டு வந்தாலோ அல்லது உடம்பில் பூசி குளித்து வந்தாலும் சருமத்திற்கு பாதுகாப்பு சாதனமாக...
காடி எனப்படும் வினிகரில் ரோஜா இதழ்களை ஊற வைத்து கன்னங்களில் தடவி வந்தால் கன்னங்கள் ரோஜா நிறமாக மாறும்.
உடலில் தேவையில்லாத இடத்தில முடிகளை அகற்ற கடலை மாவு அல்லது மஞ்சளை தொடர்ந்து பயன்படுத்த வேண்டும்.
சருமம் பளபளப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க கிரீம்கள், தைலங்கள் போன்றவற்றைப் பயன்படுத்தாமல் உட்கொள்ளும் உணவு வகைகளை சீரமைத்துக் கொள்வதன் மூலமே சிறப்பான சரும...