ஓமம் – 350 கிராம்
புளித்த மோர் – 1/2 லிட்டர்
எலுமிச்சம்பழச்சாறு – 16 அவுன்சு
இந்துப்பு – 150 கிராம்
ஓமத்தை இளவறுப்பாக இளவறுப்பாக வறுத்து, கசக்கி, உமி நீக்கி ஒரு நாள் முழுவதும் புளித்த மோரில் ஊற வைத்து எடுத்து உலர்த்திய பிறகு, எலுமிச்சம்பழச் சாற்றுடன் இந்துப்பையும் போட்டுக் கரைத்து அதில் 2 நாள் ஊற வைத்து உலர்த்தி சீசாவில் பத்திரப்படுத்தவும்.
இதை குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் எடுத்துக் கொள்ளலாம்.
குழந்தைக்கு – 5 கிராம்
பெரியவர்களுக்கு – 10 கிராம்
உபயோகம் : வயிற்று வலி, வாயு, வயிற்றுப் பொருமல், அஜீரணம் ஆகிய நோய்கள் குணமாகும்.