வெந்தய எண்ணெய்

சோற்றுக்கற்றாழை மடலை இரண்டாகப் பிளந்து அதனுள் 3 ரூபா எடை வெந்தயத்தை மூடி நூலால் சுற்றி மூன்று நாள் வைத்துவிடவும். பிறகு எடுத்து அந்த வெந்தயத்தை சோற்றுக் கற்றாழைச் சாறு விட்டு அரைத்து, அரைப்படி சிற்றாமணக்கு எண்ணெயில் கரைத்துக் காய்ச்சி வடித்து அதில்,

மிளகு – 15 கிராம்
கசகசா – 15 கிராம்
ஏலக்காய் – 15 கிராம்
கற்கண்டு – 30 கிராம்

ஆகியவற்றை பொடி செய்து மேலே கூறிய சாற்றில் கலந்து சீசாவில் பத்திரப் படுத்தவும்.

குழந்தைக்கு : ஒரு தேக்கரண்டி

சிசுவுக்கு : தாராளமாக நாக்கில் தடவலாம்

உபயோகம் : கணை, உடல் எரிச்சல், கைகால் எரிச்சல் , உஷ்ணரோகம் முதலிய நோய்கள் குணமாகும்.

 

 

Show Buttons
Hide Buttons