கோரோசனை மாத்திரை

கோரோசனை – 30 கிராம்
சுக்கு – 15 கிராம்
மிளகு – 15 கிராம்
திப்பிலி – 15 கிராம்
கடுக்காய் – 15 கிராம்
தான்றிக்காய் – 15 கிராம்
நெல்லி வற்றல் – 15 கிராம்
ஏலம் – 15 கிராம்
கிராம்பு – 15 கிராம்
அதிமதுரம் – 15 கிராம்
அக்ரகாரம் – 10 கிராம்
கோஷ்டம் – 10 கிராம்
சாதிபத்திரி – 10 கிராம்
நன்னாரி வேர் – 15 கிராம்
சிறுகீரை வேர் – 15 கிராம்
பொன்னாங்கண்ணி வேர் – 15 கிராம்

ஒன்று சேர்த்து, மணத்தக்காளி சாறு விட்டு நன்றாக அரைத்து இலந்தைக் கொட்டை அளவு பெரிய மாத்திரைகளாக உருட்டி நிழலில் காய வைத்து சீசாவில் பத்திரப்படுத்தவும்.

இதை குழந்தைகள் மற்றும் தாய்மார்கள் எடுத்துக் கொள்ளலாம்.

அளவு : குழந்தைக்கு ஒரு மாத்திரை

தாயாருக்கு 2 மாத்திரை அளவு

உபயோகம் : சுரம், வயிற்றோட்டம், மயக்கம் , உடல் வலி தீரும்.

அனுபானம் (துணைமருந்து) : இஞ்சிச்சாறு, தேன்.

Show Buttons
Hide Buttons