குழந்தை ‘இரைப்பூச்சி’ களினால் அவதிப்பட்டால் முகம் வெளுத்திருக்கும். ஆசனவாயிலும் மூக்கு துவாரங்களிலும் பசபசவென்று நமைச்சல் இருக்கும். ஓயாத நித்திரையும், அதில் பற்கடிப்பும் இருக்கும். அடி வயிறு திரண்டு கட்டி போல் இருக்கும். சில சமயம் வயிற்ரோட்டமும் உண்டாகும்.
மருந்து 1
பிரண்டைத் தண்டு – 50 கிராம்
பேய் பீர்க்கு வேர் – 50 கிராம்
ஓமம் – 50 கிராம்
புரச விதை – 50 கிராம்
ஒன்று சேர்த்து தூள் செய்து ஒரு லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக சுண்டக் காய்ச்சிய கசாயத்தில் காலை, மாலை ஒரு அவுன்சு வீதம் கொடுக்க வேண்டும்.
பத்தியம் : உப்பு, புளி, கடுகு தள்ளுபடி
மருந்து 2
கழற்சிஇலைச்சாறு – 6 அவுன்சு
பாகலிலைச்சாறு – 6 அவுன்சு
சிற்றாமணக்கு எண்ணெய் – 12 அவுன்சு
சுக்கு – 10 கிராம்
வசம்பு – 10 கிராம்
பூண்டு – 10 கிராம்
இவற்றை ஒன்று சேர்த்து போடி செய்து எண்ணெய், சாறுகளுடன் போட்டுக் காய்ச்சி வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்சு வீதம் காலையில் (வெறும் வயிற்றில் )கொடுக்க வேண்டும்.
இதில் கிருமிகள் வெளிப்படவில்லையானால் மறுவாரத்தில் திரும்ப மூன்று நாளைக்கு கொடுக்கலாம்.