மருந்து 1
மருந்து கடைகளில் ‘நகம்’ என்று கேட்டால் கிடைக்கும்.
நகம் – 70 கிராம்
செவ்விளநீர் – அரைக்கால் லிட்டர்
நல்லெண்ணெய் – 1400 கிராம்
‘நகம்’ மூலிகையை நன்றாக பொடி செய்து செவ்விளநீரில் கலக்கி நல்லெண்ணெய் உடன் அடுப்பில் ஏற்றி அடியில் உறையும் கசடு மணல் பாகத்தில் வரும் போது இறக்கி வடிகட்டி சீசாவில் பத்திரப்படுத்தவும்.
இந்த தைலத்தை தினமும் தலைக்குத் தேய்த்துக் குளித்து வர வேண்டும்.
மருந்து 2
கரிசலாங்கண்ணி சாறு – 1/4 லிட்டர்
நல்லெண்ணெய் – அரைக்கால் லிட்டர்
பசு பால் – அரைக்கால் லிட்டர்
இவற்றை அடுப்பில் ஏற்றி கரிசலாங்கண்ணி தழையை அரைத்து எலுமிச்சை பழ அளவு உருண்டை கல்கமாய்க் கூட்டி மணல் பதத்தில் காய்ச்சி வாடி கட்டி எடுத்துக் கொள்ளவும்.
இத்தைலத்துடன் மறுபடியும் கரிசலாங்கண்ணிச் சாறு பசுவின் பால் ,கலகம் இம்மூன்றையும் கூட்டி மறுபடியும் காய்ச்ச வேண்டும். இவ்வாறு குறைந்தது மூன்று தரம் மடக்கிக் காய்ச்சிய தைலத்தை சீசாவில் பத்திரப்படுத்தவும்.
தென்னங்குச்சியின் நுனியில் பஞ்சைச் சுற்றிக் கொண்டு அதனால் இத்தைலத்தை எடுத்துத் தொண்டையில் வளர்ந்துள்ள டான்சிலின் மேல் நன்றாகத் தடவ வேண்டும். இதனால் தொண்டையில் வளரும் சதை குறைவதோடு புண்,வீக்கம் குறைந்து குணமாகும்.