குழந்தையின் சீரண உறுப்புகள் சிறுகுடல், பெருங்குடல், அழற்சியடைந்துவிடுவதால் உண்டாவதே ஆமக் கழிச்சல். இதற்கான அறிகுறிகள் சுரம் உண்டாகும். கை,கால் மட்டும் சிலிர்த்திருக்கும். வயிறிரைந்து மலம் கழியும். சில சமயம் மலத்துடன் ரத்தமும் காணும். வாந்தியும் இருக்கும்.
மருந்து
சீரகம் – 10 கிராம்
காசுக்கட்டி – 10 கிராம்
களிப்பாக்கு – 10 கிராம்
கோரோசனை – 10 கிராம்
இவற்றை ஒன்று சேர்த்து எலுமிச்சம்பழச் சாற்றினால் மைபோல் அரைத்து வைத்துக் கொண்டு நான்கில் ஒரு பாகம் வேலைக்கு ஒரு அவுன்சு தாய்ப்பாலில் கலக்கி காலை, மாலை கொடுத்து வரவும்.
இரண்டே நாளில், நான்கு வேலை மருந்தில் பூரண குணம் காணலாம்.