அதிசாரம்

அசீரணத்தினால் வருவதே அதிசாரம் . குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் தாய்மார்கள் இலகுவில் சீரணிக்காத பதார்த்தங்களை சாப்பிட்டால், பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அதிசாரம் உண்டாகும்.

குழந்தைகளுக்கு அதிசாரம் கண்டால் வயிறிரைந்து, மலம் தண்ணீராகக் கழியும். பால் குடிக்கும் குழந்தையானால் பால் திரண்டு புளிப்பு நாற்றத்துடன் தண்ணீர் கலந்து கழியும். வயிற்றோட்டம் அதிகமாய் இருக்கும். நாவில் மாவு படிந்திருக்கும். வயிறு இரையும். நாவறட்சி காணும்.

மருந்து 1

சிறுநாகப்பூ – 15 கிராம்
கொத்தமல்லி – 15 கிராம்
திப்பிலி – 15 கிராம்
வில்வவேர் – 15 கிராம்
வில்வம்பட்டை – 15 கிராம்
கோரைக்கிழங்கு – 15 கிராம்
துளசி வேர் – 15 கிராம்

இவற்றை இளவறுப்பாக வறுத்து எடுத்து, ஒரு லிட்டர் நீரிலிட்டு 1/4 லிட்டராக சுண்டக்காய்ச்சிய கசாயத்தில் வேளைக்கு ஒரு அவுன்சு வீதம் மூன்று வேளை கொடுக்க வேண்டும். தாயாரும் சாப்பிடலாம்.

மருந்து 2

ஓமம் – 15 கிராம்
வசம்பு – 15 கிராம்
வெள்ளைப்பூண்டு – 15 கிராம்
பிரண்டை – 15 கிராம்

ஒன்றூ சேர்த்து தட்டி அரைப்படி நீரில் போட்டுக் காய்ச்சி அரைக்கால் படியாக்கிய கசாயத்தில் வேளைக்கு ஒரு அவுன்சு வீதம் கொடுக்க வேண்டும். காலை , மாலை மட்டும் போதுமானது.

மருந்து 3

அதிவிடயத்தை சூரணித்து காலை, மாலை, அரைக்கால் ரூபாய் எடையாகத் தேனில் குழப்பிக் கொடுக்கலாம்.

Show Buttons
Hide Buttons